எனக்குப் பிடித்தவர்கள்
எனக்குப் பிடித்த பிரபலங்கள் சிலரைப் பற்றி பார்க்கலாம்...
தற்போது பார்க்க போகும் நால்வரில் மூன்று பேர் அதிகமான விமர்சனங்களை சந்தித்தவர்கள்... எனக்குப் பிடித்தமானவர்களாய் இருப்பதினாலே இவர்கள் அதிக விமர்சனங்களை சந்தித்தனரா என்று நானறியேன்... என்னுடைய ராசி அப்படி என்றும் வைத்துக் கொள்ளலாம்...
இவர்களைப் பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்று இல்லை... எனக்கு இவர்களைப் பிடிக்க என்ன காரணம் என்று மட்டும் இங்கே பார்க்கலாம்... "ஒருத்தர பிடிக்காததுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம்,ஆனா பிடிச்சதுக்கு காரணம் சொல்ல முடியாது"ன்னு ஒரு படத்துல விஜய் சொன்னதா ஞாபகம்... இருந்தாலும் நான் இப்ப ப்ளாக் எழுத எதாவது காரணம் வேணும்க்ற ஒரே காரணுத்துக்காக விஜய் அப்டி சொன்ன படத்தையும் அந்த dialogayum நான் மறந்துட்டேன். இந்த blogஅ படிக்கனும்கறதால நீங்களும் அத மறந்துடுங்க...
முன்குறிப்பு: எனக்கு ஓரளவு தமிழ் நல்லாவே எழத வரும்... ஆனா translator ல எழுதுறதால வருகின்ற பிழைகளை மன்னிக்கவும்.
1. விஜய் :
முதல் பேர சொன்ன உடனேய தெரிஞ்சிருக்கும்.... தமிழ் சினிமால அதிக விமர்சனங்களயும் அதிக ரசிகர்களையும் கொண்டுள்ள நடிகர்னு இவர சொல்லலாம்... இப்ப powerstar னு ஒருத்தர் வந்துட்டு இருக்கார்... என்னடா இவனே விஜய ஓட்டுரானேனு பாக்குறீங்களா... என்னங்க பண்றது, மத்தவங்க ஓட்ட முன்னாடி நாமளே ஓட்டிகிட்டா damage கம்மியாகும் பாருங்க ... ஆனா ஒண்ணுங்க... நான் ஸ்கூல் படிக்கும் வரை விஜய் பத்தி அதிகமா விமர்சனம் வந்தது இல்ல. நானும் ஒன்னும் விஜயோட பெரிய fanum இல்ல... ஆனா காலேஜ் போனதுக்கு அப்புறம் விஜய ரொம்ப ஓட்டுனாங்க... நானும் பெரிய விஜய் ரசிகராயிட்டேன்... இது என்ன ratio னு தெரியல... may be indirect proportion ஆ இருக்கும்னு நெனைக்கிறேன்.
நான் ஏன் விஜய் ரசிகரா இருக்கேன்னு ரொம்ப பேரு கேட்ருக்காங்க... நான் ஒன்னும் சுறா பாத்துட்டு விஜய் ரசிகராகலங்க... நாங்கல்லாம் ப்ரியமானவளே , சச்சீன், துள்ளாத மனமும் துள்ளும் பார்த்து விஜய் fan ஆனவங்க... அவ்ளோ சீக்கிரம் மாத்த முடியாது... சரி வேட்டைக்காரன்,சுறா படம் பாத்துட்டு வேற யாராவது ரசிகர் ஆயிரலம்னு முடிவு பண்ணினா மனுஷன் உடனே காவலன், வேலாயுதம், நண்பன் மாதிரி படம் குடுதுடுறாரு .... நான் என்னங்க பண்றது... இதுல அடுத்து வேற வரிசையா நல்ல directors படமா வேற வருது... சான்சே இல்லைங்க... இன்னும் 30 வருசத்துக்கு நன் விஜய் ரசிகனாவே இருப்பேன் போல....
**** நாங்க புகை பிடிச்ச அந்த scena கட் பண்ணிடுறாங்க... இத mankathaல பண்ணிருந்தா படமே 10 நிமிசம்தான் வந்திருக்கும்.****
2. தினேஷ் கார்த்திக்:
இவரு பேர சொன்ன உடனே இவன்லாம் பிரபலமானு பாக்காதீங்க... எனக்கு இவர பிடிக்கும்ங்க... தயவு செஞ்சி அப்படி பாக்காதீங்க... நான் விஜய் ரசிகர்னு கூட தைரியமா சொல்லிடுவேன்... ஆனா தினேஷ் கார்த்திக் பிடிக்கும்னு சொன்னா பயங்கரமா கலைப்பாங்க... நான் ஆரம்பத்துல மறந்துட்டாத சொன்ன அந்த விஜய் dialog கண்டிப்பா இவருக்கு பொருந்தும்ங்க... இவர ஏன் புடிச்சது எதுக்கு புடிச்சதுன்னு கேட்டா என்னிடம் சத்தியமா பதில் இல்லங்க...
ஆனா எந்த அளவுக்கு இவர புடிக்கும்னு வேணும்னா சொல்லலாம்... த்விட்டர்ல இவரு போட்டோவ dp யா வச்சிருகிற அளவு இவரோட ரசிகருங்க நான்... எல்லாரும் தமிழ்நாடு டீம்னு csk ku சப்போர்ட் பண்ணுவாங்க... இவர டீம்ல எடுக்கலங்கர ஒரே காரணுத்துக்காக anti-csk ஆனவங்க நானு... இவருக்க first மூணு ipl DD,அப்புறம் KXIP, இப்ப MI சப்போர்ட் பண்ணிட்டு இருக்கேங்க... ஆனா பையன் மேல எனக்கு நம்பிக்கை இருக்குங்க... ஆடுற வரை ஆடிட்டு சடகோபன் ரமேஷ் மாதிரி சினிமாக்கு வந்துட்டாலும் ஆச்சர்யம் இல்ல... அப்ப வேனும்ன விஜய மாத்திட்டு இவர் ரசிகர் ஆக வாய்ப்புள்ளது...
**** Got reply from him for more than 5 times in twitter ****
3.க்ரிஷ்:
இவரப் பத்தியும் நம்ம மக்களுக்கு போதுமான வரை தெரிஞ்சுருக்கும்னு நம்புறேன்... முதல்ல தெரியாதவங்களுக்கும் இவரோட கல்யாணத்துக்கு அப்புறம் இவர தெரிஞ்சுருக்கும்... மத்த ரெண்டு பேரு மாதிரி தாங்க இவரும்... விமர்சனங்கள் பல உண்டு இவர் மேல... சாருக்கு சங்கீதமே வராது,வெட்டி scene போடுவாருன்னு பலர் சொல்லி நானே கேட்டது உண்டு...
ஆனா 100 வாய்ஸ் குடுத்து கண்டு பிடிக்க சொன்னாலும் இவர் வாய்ஸ் அ கரெக்டா கண்டுபிடிச்சுடுவேன்... இவரு பாடுனாருங்ர ஒரே காரணுத்துக்காகவே யாருமே கேக்காத முத்திரைனு ஒரு படத்தோட பாடல்களையும் டவுன்லோட் செஞ்சி வச்சிருக்கேன்...
இவர எந்த அளவு பிடிக்கும்னா ஆர்குட்ல என் profile போட்டோவே சாரோடது தான். இதுல வேடிக்கை என்னன்னா சாரும் பயங்கரமான விஜய் fan... இது எனக்கே late ஆதான் தெரிஞ்சது... அப்புறம் சார் இந்தியன் born அமெரிக்கன் வளர்ப்பு... கம்ப்யூட்டர் சயின்ஸ் ட்ராப் அவுட்... கூடிய விரைவில் வெள்ளித்திரையில் சார எதிர்பார்க்கலாம்.
***பல முறை த்விட்டேர் மூலம் reply வாங்கியுள்ளேன்... சில முறை என் த்வீட்சை சார் RT பண்ணியதும் உண்டு***
4.மதன் கார்க்கி :
எனக்குப் பிடித்த பிரபலங்களுள் அதிக விமர்சனங்களை சந்திக்காதவர் இவர்... அதனாலே இவர் கொஞ்சம் ஸ்பெஷல். இவரைப் பிடிப்பதற்கு என்னால் ஓரளவு காரணம் சொல்ல முடியும்... இவர் சார்ந்துள்ள துறை ஒரு பெரிய காரணம்... ஆமாம்... சார் ஒரு எஞ்சினியர்... பாடலாசிரியர் + விரிவுரையாளர் என்ற இரு பணிகளிலும் சிறப்பாக செயல்படுகிறார்... அதுவே இவரது சிறப்பு... என்னமோ ஏதோ மற்றும் அஸ்கா லஸ்க வரும் முன்னரே சார் எனது favourite ஆவார்...மற்ற மூவரை விட இவர் மீது நம்பிக்கை அதிகம்... எங்கு வேண்டுமானாலும் பெருமையாக சொல்வேன் நான் karkkyin ரசிகன் என்று...
*** சாரிடமும் நந்தினி மேடமிடமும் பல முறை பேச த்விட்டேர் வாய்ப்பளித்துள்ளது...***




நல்ல முயற்சிடா! :) இன்னும் பல டாபிக்ல எழுது! வாழ்த்துக்கள்! :)
ReplyDeleteWish you all the best for developing your blog da.
ReplyDeleteThank u...
ReplyDeleteGood da.:) download and use google trans'literate' ime. You can avoid spell mistakes:)
ReplyDeleteanna.........sathyama indha naalu paerla 2 peru enaku romba pidikum...........one u know and other one is karky
ReplyDelete