Sunday, 10 June 2018

க்யாரே செட்டிங்கா

காட்சி 1 : சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் [1989]

காட்சி 2: யாரு நீங்க? நான்தான்பா ரஜினிகாந்த் [2018]


                 இந்த காட்சிகளுக்கு சிறிது நேரம் கழித்து வரலாம். சமூக விரோதி என நம்மை சொன்ன ஒருவரின் படத்திற்கு போக கூடாது என்பவர்கள் அனைவரும் என்னை  மன்னிப்பார்களாக. காலா பார்த்தாயிற்று. இது பட விமர்சனம் தான்.  அனால் அதையும் தாண்டி இது ஒரு நல்ல கருத்து விவாதத்திற்கு அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கலாம்.

 பீம்ஜி ரஞ்சித் :

                 திரைப்படம் என்பது என்ன, எதற்காக என்பது  ஒவ்வொரு ரசிகனுக்கும்  வேறுபடும். ஒரு சிலருக்கு அது சிரிப்பை வரவழைக்க, ஒரு சிலருக்கு அது தன ஆதர்ச நாயகனை வழிபட, ஒரு சிலருக்கு அது சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாய் பார்க்க. படம் பார்க்கும் ரசிகனுக்கே இப்படி என்றால் படம் எடுக்கும் கலைஞனுக்கு அது எப்படி வேறுபாடும் என சொல்ல வேண்டியதில்லை. அந்த வகையில் ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தவிர்க்க கூடாத ஒரு இயக்குனர்.


             

                 சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றான் பாரதி. இது உண்மையாக வேண்டும் என்பது உண்மை தான். அனால் இது யாருக்கு பொருந்தும் என்பது கேள்வி. ரஞ்சித்தை சாதி இயக்குனர் என முத்திரை இடுவது மிக கொடுமை. பாரதி சொன்ன அந்த வார்த்தை உண்மை அனால் அது பெரும் நன்மை தரக்கூடியயது ரஞ்சித் போன்ற மக்களுக்கு தான். அப்படி இருக்க அவர் ஏன் சாதி  இருக்கிறது என சொல்கிறார் என்பது ஆராய வேண்டியது. சாதியும் அதன் கொடுமைகளும்  இருக்க கூடாது என்பது உண்மை. அனால் இருக்கும் ஒன்றை இல்லை என்று கடந்து விட முடியாது.




                 வெளி வந்த கச்சநத்தமும்  வெளி வராத பல கொடுமைகளும் இருக்கும் காலத்தில் பாரதியின் அந்த பாடல் மருது, கொம்பன், தேவராட்டம்  என்று கொம்பு சீவிடும் மக்களுக்கும், பதவி இருக்கும் ஆணவத்தில் ஆட்டமிடும்  தன்னை தானே மேன் மக்கள் என சொல்பவர்களுக்கும், இடையில் இருப்பதால் தன்னை ஆதிக்க இனமாக எண்ணியும் அதே சமயம் பிற்படுத்த பட்டதாக சொல்லி சலுகையும் பெரும் மக்களுக்குமே மிக அவசியம் ஆகிறது.

                 மாட்டு கறி சாப்பிடுவது தங்கள் வாழ்வின் ஒரு அங்கம் என அட்டைக்கத்தியில் ஆரம்பித்தவர், மெட்ராஸ் படத்தில் பேசிய அரசியல் மிக பெரியது. கபாலியில் அரசியல் இருந்தாலும் அது ரஜினியை வித்யாசமாக பார்க்கிறோம் என்ற எண்ணத்தையே ரசிகனிடம் அதிகம் விதைத்தது.  காலா ஒரு படமாகவும் அரசியலை நெற்றி பொட்டில் அடித்த விதமாகவும் கபாலியை விட மேல். ரஜினியாகவே இருந்தாலும் தான் சொல்ல வருவதை தான் சொல்வேன் என்ற மாத்திரத்தில் ரஞ்சித் ஒரு வெற்றியாளர் தான்.

காலா - ஒரு திரைப்படம்:

                 அட்டைக்கத்தியும் மெட்ராஸ் படமும் அரசியல் பேசியது என்பதே தெரியாமலே , வெகு ஜன மக்கள் பலரும் அந்த படங்களை விரும்பினர். அரசியல் தவிர்த்து பார்த்தாலும் அந்த படங்கள் சிறந்த கதை, திரைக்கதை கொண்டவை. கபாலி கூட ரஜினி என்னும் பிம்பத்தை மாற்றி காட்டிய வகையில் ஏற்று கொள்ளலாம். அனால் காலாவில் ரஜினியையும் இந்துத்வ எதிர்ப்பு அரசியலையும் கழித்து விட்டால் படமாக என்ன மிச்சம் இருக்கிறது என்பது ரஞ்சித்திற்கே தெரியும். ரஜினியும், நானாவும், சந்தோஷ் இசையுமே படத்தை காப்பாற்றி இருக்கிறது .



                   ஒரு இயக்குனராக வெற்றி பெறுவதை விட ஒரு புரட்சியாளனாக வெற்றி பெறுவதையே அதிகம் விரும்புவதாக இருந்தால் வாழ்த்துக்கள். அனால் அப்படி முடிவெடுத்தால், வணிக சமரசத்திற்காக ரெயின் பைட் , தங்க சீலை பாட்டு தேவை இல்லையே. இரட்டை குதிரை சவாரியை தவிர்த்தால் நலம். ரஜினி இல்லாத அடுத்த படம் எடுக்கும் போது கதைக்கும் கொஞ்சம் முக்கியம் கொடுப்பார் என்று உறுதியாக நம்புவோம்.     

ராவண காவியம்:

               படத்தில் தலித் அரசியல் விட இம்முறை இந்துத்வ எதிர்ப்பே தூக்கி இருக்கிறது. இந்துத்வ எதிர்ப்பு நாடு முழுக்க உச்சத்தில் இருக்கும் இந்த காலத்தில் இதில் பெரும் ஆச்சர்யம் இல்லை. ராமரை வில்லனாகவும் ராவணனை நாயகனாகவும் காட்டும்  ராவண காவிய குறியீடுகள் படம் நெடுக உள்ளது. ராமரை வழிபாடும் நாயகன், வால்மீகி பகடி, பத்து தலை ராவணன் பாட்டு, காலா வீடு எரியும் போது  இலங்கை எரித்த அனுமன் குறியீடு , நானாவின் அடியாளை அனுமனாகவே காட்டியது, அனைத்திற்கும் உச்ச பட்சமாக பட இறுதியில், ராமர் காவியம் பாடி ரஜினியை வதைப்பது என்று. ஆன்மிக அரசியல் வாதியை வைத்தே இதை செய்ததுற்கு வாழ்த்துக்கள் ரஞ்சித்.



                இறுதியில் வண்ண பொடியில் பெரியாரின் கருப்பு, கம்யூனிஸ்ட்களின் சிவப்பு, அம்பேத்கரின் நீலம் என தூவியுள்ளார்.  இது தவிர காலாவை கலைஞருடன் ஒப்பிட்டு ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. காலா - கருணாநிதி, மனைவி, துணைவி, மூத்த மகன் தளபதி, மகன் பெயர் ரஷ்யா புரட்சியாளன் பெயர் என ஒரு குறியீட்டு விளக்கம். அட ஆமாம் சரியாக இருக்கிறதே என்று தோன்றும். இப்படி ஒவ்வொரு ரசிகனும் ஒவ்வொரு பார்வையினை படத்தில் பார்க்கலாம்.              

 பிம்பங்களின் உடைபாடு:                    

                எவ்வளவு தான் சரி செய்தாலும் இடிந்து விழும் சென்னை விமான நிலைய கண்ணாடி போல் நாம் மனதில் வைத்திருக்கும் பலருடைய பிம்பங்களும் ஒரு நாள் உடை படும். நாம் பெரிதும் மதிக்கும் பெருமையின் சிகரமாக நினைக்கும் தஞ்சை பெரிய கோவிலின் மறுபக்கமும் உள்ளது. ராஜ ராஜன் அக்கோயிலை ஒரு வணிக நோக்கமாகவும், தன் பெருமை போற்றவுமே செய்தான் என்றும் ஒரு குறிப்பிட்ட மேன் மக்கள் இனத்தின் அடிவருடியாக இருந்தான் என்றும், அப்படி இல்லாமல் இருந்ததாலே ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டான் என்றும் ஒரு கருத்து உள்ளது. அதை போல்  ராம ராவணன் பிம்பமும் ஒரு நாள் உடை பட வாய்ப்புள்ளது.  அவ்வளவு ஏன் நம் காலத்திலே நாம் எல்லாரும் பார்க்கவே ஒரு பிம்பம் சுக்கு நூறாக உடை பட்டுள்ளது. யாரென்று தெரியவில்லை என்றால் கட்டுரையின் முதல் வரிக்கு மீண்டும் போய் பார்க்கவும்.      












     

Sunday, 30 April 2017

பாஹுபலியும் மற்றும் சிலரும்

          அமெரிக்கா வந்துவிட்டு தமிழ் கன் மற்றும் youtube இருந்தும் முதல் நாளே பிரிண்ட் வந்தும் அடம்பிடித்து தியேட்டர்ல போய்  பார்த்த படம் பத்தி கொஞ்சமாயினும்  சொல்ல வேண்டும் இல்லையா ... அதன் விளைவு தான் இந்த பதிவு.

          முதலில் ராஜமௌலி என்னும் பிம்பம் விக்ரமார்க்கடு ஆகட்டும் மகதீரா ஆகட்டும் நான் ஈ ஆகட்டும் இல்லை மரியாதை ராமண்ணா ஆகட்டும் , கதை சொல்லும் விதத்தில் என்னை கவர தவறியதே இல்லை.

                                    A still from the film. Image via Youtube.

          மேலே சொன்ன எந்த படத்தையும் திரை அரங்கில் சென்று பார்த்தது இல்லை பாஹுபலி 1 உட்பட. இது எல்லாம் மகா பாவ செயல் என்று விஷால் நினைத்தால் அதை இந்த படம் பார்த்து கழுவி கொண்டேன் ... இந்த பாவியை விஷால் மன்னிப்பாராக.

          பிரமாண்டத்தை  விட சில உணர்ச்சிகரமான நிகழ்வுகளால் மட்டுமே படம் இன்னும் மனதில் நிற்கிறது. தேவசேனா - சிவகாமி முதல் சந்திப்பின் போது பாஹுபலியின் செயல் , மகிழ்மதி இளைப்பாறும் இடைவேளை, சேனாதிபதி தண்டனை, மகேந்திர பாஹுபலி அறிமுகம் ஆகியவை குறிப்பிட தக்கவை. பனை மர சண்டை,

                                    Image result for baahubali 2

            யானை அடக்குதல், தேரை தூக்குதல்  எல்லாம் தவிர்த்து பார்த்தால்   சண்டை காட்சிகளும் மாட மாளிகைகளும் சற்றும் குறை சொல்ல தகுதி அற்றவை. இது கண்டிப்பாக பட விமர்சன கட்டுரை அல்ல. படம் கண்டிப்பாக திரை அரங்கில் பார்க்க முழு தகுதியான ஒன்று. தாராளமாக பாருங்கள்.

                                       Image result for baahubali 2

இந்த இடம் தான் கட்டுரையில் முக்கியமான ஒன்று. மனச திடமா வச்சிக்கோங்க. மேற்கொண்டு இந்த கட்டுரையை 3 பகுதிகளாக பிரிப்போம்.


1. ராஜமௌலியும் சங்கரும் :


                                              Image result for rajamouli shankar

            ராஜமௌலி ஆகட்டும் ஷங்கர் ஆகட்டும் கதை சொல்லும் விதத்திலோ காட்சி படுத்தும் விதத்திலோ ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை. இந்த காம்பரிசின் தேவை அற்றது. பாஹுபலி பிரமாண்டம் பேசுபவர்கள் எந்திரனின் நேர்த்தியை மறந்து விடுகிறார்கள்.

                                                Image result for endhiran

           கதை சொல்லும் விதத்தில் ஐ படம் சறுக்கல் தான். சுஜாதா இல்லாத ஷங்கர் மீண்டு வர காலமாகும். அது நடக்கும் வரை அமைதி தேவை. விஜயேந்திர பிரசாத் இல்லாத ராஜமௌலி இன்னும் வரவில்லை. அதனால் கதை எழுதுவதில் அவர் பெரிய சவாலை  சமாளிக்கவில்லை. இதே கதையை ஷங்கர் பண்ணியிருந்தால் கண்டிப்பாக இதே அளவோ அல்ல இதை விட மேலாகவோ பண்ணியிருப்பார். ஷங்கர் ராஜமௌளியிடம் கற்க வேண்டியது எதற்கு செலவு செய்ய வேண்டும் என்பது. புது LED டிவி உடைப்பதோ புது ஆடி கார் உடைப்பதோ பிரமாண்டம் இல்லை என்று உணர வேண்டும்.

                                            Image result for vijay nanban king

            ஒரு விஷயம் பாராட்ட வேண்டியது கதை களம். Outdated என்று நாம் சொல்லும் மன்னர் காலத்து கதையை தைரியமாக எடுத்த நம்பிக்கை. இதில் பாராட்டப்பட வேண்டியது ராஜமௌலி மட்டும் அல்ல , தெலுகு ரசிகர்களும் தான். பாஹுபலி திறந்து விட்ட இந்த கதவில் தமிழிலும் நுளைந்து செல்வார்கள் என்று நம்புவோம்.  



2. பாஹுபலியும் ஆயிரத்தில் ஒருவனும் :


                                       Image result for aayirathil oruvan

             மேலோட்டமாக பார்த்தால் இது மட்டமான மதிப்பீடாக தெரியலாம். இல்லை நியாயமான கோபமாகவும் தெரியலாம். எனக்கு தெரிந்து புதுப்பேட்டை ஆகட்டும் ஆயிரத்தில் ஒருவன் ஆகட்டும் , இரண்டையும் பார்க்காமலே அவற்றை தீண்ட தகாத பொருளாக பார்ப்பவர்கள் அதிகம். ஒரே ஒரு முறை இரண்டையும் பாருங்கள் என்பதே தாழ்மையான வேண்டுகோள். கண்டிப்பாக பாஹுபலியின் உழைப்பும் தரமும் பணமும் வியாபாரமும் ஆயிரத்தில் ஒருவனை விட பாஹுபலி - பல்லாளதேவன்  அளவு அதிகம். அனால் கதை என்று எடுத்து கொண்டால் கன்டென்ட் என்று பார்த்தால் ஆயிரத்தில் ஒருவன் ஒருபடி இல்லை பல படி மேல் .

                  Image result for chola entry aayirathil oruvan
              ஆயிரத்தில் ஒருவன் மேல் எனக்கு பல கருத்து வேறுபாடு உண்டு. கண்டிப்பாக சோழ வரலாறு அறிந்த பண்பாடு அறிந்த எவருக்கும் அதில் காட்டப்பட்ட முறை உடன்பாடு இல்லாத ஒன்று. அனால் அது ஒரு தவிர்க்க முடியாத படம். ஒரு அசாதாரண நம்பிக்கை கொண்ட ஒரு இயக்குனர் எடுத்த படம். செல்வா மட்டுமே எடுக்க கூடிய படம்.

              சொந்த நாடிழந்த வாழ்க்கை இழந்த வெளி உலக தொடர்பிழந்த உலகின் நாகரிக மூத்த குடி அவ்விதம் ஆகியிருக்க வாய்ப்பு இல்லை என்று யாராலும் கூற முடியாது. அசாதாரணமான , அதே சமயம் மிகவும் வாய்ப்பு இருக்க கூடிய கற்பனை அது.

           
         
             படத்தை ஒரே வார்த்தையில் psycho படம் என்பவர்கள் ஒரே ஒரு முறை பாருங்கள். Atleast மேலே உள்ள  இந்த காணொளி மட்டுமாவது பார்த்தால் நல்லது.   மன்னன் என்றால் தங்க நகை அணிந்து பட்டாடை அணிந்து சிறப்பாக வாழ்பவர்கள் என்ற மாயை உடைத்து ரத்தமும் சதையுமாக பாருங்கள். தூதுவன் வருவான் மாறி பொழியும் என்று fantasy மற்றும் வரலாற்றுக்கு இடையில் செல்வா சறுக்கியது உண்மை. படத்தில் 1000 குறைகள் உள்ளது. அனால் அந்த படம் பெற வேண்டிய மரியாதையை பெறவில்லை என்பதே உண்மை. மொழி புரிய வில்லை என்றால் தமிழுக்கே subtitle வைத்தாவது பாருங்கள்.

             மக்களுக்கு பிடித்ததாக சொல்லி ஏமாற்றி படம் பார்க்க வைக்காமல் திட்டினாலும்  மக்கள் ரெண்டு நாள் சிந்திக்கட்டும் என்ற வகை படம் அது. ஆயிரத்தில்  ஒருவனுக்கு குறைந்த பட்ச வரவேற்பு குடுத்து இருந்தாலும் சோழனின் பயணம் தொடர்ந்து இருக்கும். தமிழிலும் பல பாஹுபலிகள் வந்திருப்பார்கள்.

3. பாஹுபலியும் அருள் மொழி வர்மரும் :

               ஆயிரம் யானை லட்சம் குதிரை வைத்திருக்கும் கற்பனை பாத்திரம் பாகுபலியை சிலாகிக்கும் நாம் அதை விட பல மடங்கு சேனை வைத்திருந்த ரத்தமும் சதையுமாக வாழ்ந்த தெற்கு ஆசியாவிலே மிகப்பெரிய  கடற்படை கொண்டு பல அண்டை நாடுகள் வென்ற அருள்மொழி வர்மர் alais ராஜ ராஜ சோழனை மறந்து விட்டோம் .

                               Image result for ponniyin selvan

               கல்கியின் அற்புதம் பொன்னியின் செல்வனை படமாக்க MGR முதல் மணிரத்னம் வரை எவருக்கும் நாம் முழு தைரியம் தரவில்லை. பொன்னியின் செல்வன் படித்த அனைவர்க்கும் தெரியும் சிவகாமி தேவி எண்பது செம்பியன் மாதேவியின் பாத்திரம் என்பது.

                                         Image result for baahubali hand
மகேந்திர பாஹுபலி - சிவகாமி காப்பாற்றியது ஊமை மந்தாகினி காவேரி நதியில் செய்த சம்பவம்.

               பாஹுபலி ராஜ்ஜியம் துறந்தது கற்பனை. திருவாலங்காடு செப்பேடு கூறுவது உண்மை. மக்கள் அனைவரும் ராஜா ராஜரை தலைமை ஏற்க விரும்ப அவரோ மதுராந்த உத்தம சோழரை மன்னராக்கிய சம்பவம் உண்மை. அமரேந்திர பாஹுபலி மரணம் - ஆதித்த கரிகாலன் மரணம். பல கதைகளுக்கும் சம்பவங்களுக்கும் பொன்னியின் செல்வன் ஆதாரமாக இருந்துள்ளது. ராஜமௌலியே சொல்லியும் இருக்கிறார் இதை.    
                                               
                                         Image result for padayappa neelambari nandhini 

              படையப்பா நீலாம்பரி பொன்னியின் செல்வனின் நந்தினி என்றும் அதுவே படையப்பா முழு கதைக்கும் ஆரம்பம் என்றும் ரஜினி சொல்லியிருக்கிறார். கதையாக பார்த்தால் பாஹுபலி ஒரு சிறு துளி. பொன்னியின் செல்வனை எடுத்தால் இதை போல பல மடங்கு எடுக்கலாம். படம் எடுக்க இயக்குனர் தயங்கவில்லை, தயாரிப்பாளர் தயார், தொழில்நுட்பமும் தயார். அனால் மிகப்பெரிய கேள்வி. பார்க்க நாம் தயாரா. பாகுபாலிக்கு குடுத்த வரவேற்பை நம் சொந்த உண்மையான வரலாற்றிற்கு குடுக்க தயாரா. தந்தால் மகிழ்மதி போன்ற அதை விட பெரிய தஞ்சை சாம்ராஜ்யத்தின் மத்தியில் விஜயேந்திர சோழ குல மன்னர்கள் ஆதித்தனும் அருள்மொழி வர்மனும் வாணர் குல வந்தியத்தேவனும் நம்மை சந்திக்க விரைவில் வருவார்கள்.



Image result for thanjavur temple


    ஜெய் மகிழ்மதி. வீர வேல் . வெற்றி வேல் .




Sunday, 5 June 2016

                         இறைவி

               வீட்டில் யாருமில்லாத ஒரு சனிக்கிழமை இரவில் தூக்கம் வராமல் நள்ளிரவு 2 மணி வரை புரண்டு பின்பு ஞாயிறு காலை என்றும் பாராமல் 6 மணிக்கு அலாரம் வைத்து அது அடிக்க முன்னாடியே 4 மணிநேர அதீத தூக்கம் கலைந்து எழுந்தது உண்டா? அப்படி எழுந்து சாப்பிடக்கூட செய்யாமல் பேருந்து ஏறி 20 கிமீ தூரம் போய் ஒரு படம் பார்த்தது உண்டா? அப்படி பார்த்த படம் நல்லதோ கெட்டதோ கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அல்லவா? அதன் விளைவுதான் இந்த பதிவு.

                 அப்படி நீங்கள் மேலே சொன்னதை ஆமோதிக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம். நல்லா ஹேங்ஓவர்ல ஒரு படம் பார்த்துவிட்டு தூக்கம் வராத ஒரு தனிமையான ஞாயிறு மதியம் அன்று புஃல் டேட்டா பேக்குடன் மொபைலும் அதில் தமிழ் டைப்பிங்கும் உங்களுக்கென்று ஒரு கூகுல் பிளாக்கும் அதை சேர் செய்ய நாலு வாட்சாப் க்ரூப்பும் அதை படிக்க நாலு நண்பர்களும் இருக்கிறது என்றால் நீங்கள் அந்த படத்தை பற்றி மொக்கையாகவோ அல்லது மிக மொக்கையாகவோ ஒரு பதிவு எழுதுவீர்கள் அல்லவா. (என்னது எழுத மாட்டீர்களா… அட போங்கப்பா… நான் எழுதுவேன்.) அதுதான் இது.
             இந்த படத்தை பார்த்து விட்டு கார்த்திக் சுப்புராஜுக்கு ட்விட்டர்ல மென்சன் போட்டு அண்ணே இத்தன நாள் தூங்கிட்டு இருந்த என் அறிவுக்கண்ண நீங்க தொறந்துட்டீங்கனு சொன்ன கேட்டகரி நீங்கனா இந்த பதிவு உங்களுக்கானது இல்லை. பெண்களை தாயா மதிக்கணுமா அப்ப நாங்க என்ன நாயாவாடா மதிக்கிறோம்னு சொன்னீங்கனா ஐ ஆம் வெரி சாரி இது உங்களுக்கும் இல்ல.
படம் ஆரம்பிச்சி 3 மணிநேரம்… இல்ல இல்ல… படம் முடிஞ்சி 5 மணிநேரம் ஆகியும் இது என்ன ஜானர் படம்னே தெரியாம நான் குழம்பிட்டு இருக்கிற மாதிரி இந்த பதிவ படிச்சிட்டு நீங்களும் குழம்பக்கூடாது அப்படிங்கறதால டக்குனு (சரி சரி ஆல்ரெடி 2 பாரா போயிடுச்சு விடுங்க) ஜம்ப் ஆயிரலாம்.

 

              ஆரம்பம் (தல ரெபரனஸ்) எப்படி இருந்தாலும் க்ளைமாக்ஸ்ல ஒரு ஹேப்பி எண்டிங் வைக்கணும்னு எதிர்பாக்குற சராசரி தமிழன்தான் நானும். படம் முடிஞ்சி வெளிய வரப்ப ஒரு மனநிறைவோட வரணும். அப்படி வர முடியாதுங்கறதால தான் பாலா படத்தலாம் ட்விட்டர்ல சிலாகிக்கறதோட நிறுத்திப்பான் தமிழன். தியேட்டர் பக்கம் எட்டி பாக்க மாட்டான். அப்படி பண்ணலனா வெள்ளித்திரை படத்துல சொல்ற மாதிரி Art Film பண்ணியிருக்குற போலனு மூஞ்ச திருப்பிட்டு போயிருவான். இந்த விஷயத்துல கா.சுப்புராஜ் சருக்கியிருக்கலாம். பட் நான் முதல்ல படத்துல எனக்கு நெகட்டிவ்வா தெரிஞ்சத முதல்ல சொல்லிட்டு அப்புறம் பதிவோட க்ளைமேக்சுல ஹேப்பி எண்டிங்க வச்சுக்கலாம்.
             படத்துல மிகப்பெரிய சருக்கல் நெருடல்னு நான் நினைக்குறது படத்தோட க்ளைமேக்ஸ்தான். கிளி மாதிரி படம் எடுத்துட்டு அதுக்கு குரங்கு மாதிரி ஒரு க்ளைமேக்ஸ். ஆர்ட் கேலரிக்கு ஒரு பின்பக்க கதவு வச்சிட்டு ஜெகன் வந்தப்ப மைக்கேல் அந்த பின் பக்க கதவு வழியா போயிடுற மாதிரி வச்சிருந்தா என்ன தப்புனு தெரியல. அந்த மனிதி பாட்டு வேணும்னா வைக்க சீன் இல்லாத போயிருக்கும்.
                க்ளைமேக்ஸ்ல S.J.சூர்யா ஆண் பெண் நெடில் குறில் லெக்சர் படத்தோட ஒட்டுதுனு நினைக்கிற கேட்டகரி நீங்கனா தயவு செய்து 4,5 உலகப்படம் எனக்கு பார்சல் செய்யுங்க. நானும் பாத்து பக்குவப்படுறேன். இத ஏன் சொல்றேனா படத்துல காட்டப்படுற அருளோ மைக்கேலோ அந்த வசனத்துக்கு ஏத்த அளவு பெண்கொடுமை பண்ணாதவங்க. தனக்கு அவ்வளவு பிரச்சனை வந்தாலும் மனைவி மகளோடும் பாசமாக இருக்க போராடும் அருள்தானே அவன். தான் கல்யாணம் செய்ய நினைத்த மலரோடு வாழ முடியாமல் நிர்பந்தத்தால் பொன்னியை திருமணம் செய்தாலும் இப்போது பொன்னியையும் மகளையும் வைத்து பாசத்தோடு வாழ நினைக்கும் மைக்கேல்தானே அவன்.
             மைக்கேல் விசுவாசத்துக்கும் அருள் சுர்ருனு ஏறிடுச்சு அதான் பண்ணிட்டேன்னு சொல்ற காரணத்துக்கும் ஆண் பெண் என்ற பேதம் உண்டா. குட்டிப்புலி சின்னக்கவுண்டர் தாமிரபரணினு பல படங்கள்ள இறைவிகளும் இந்த விசயங்கள பண்ணியிருக்காங்க இல்லையா.
                மலர்விழி கதாப்பாத்திரத்த பாசிட்டிவ்ல சேக்கவா இல்ல நெகட்டிவ்ல சேக்கவானு குழப்பமா இருக்கு. கார்த்திக்கும் இதே குழப்பம் இருந்துருக்குமா தெரியல. படம் U/A பட் இந்த பதிவு U. அதனால் இதை இப்படியே விட்டுரலாம்.
                 பொஸஸிவ்னஸ்லயும் கணிக்க முடியாத மனநிலை மாற்றத்துலயும் பொண்ணுங்கள அடிச்சிக்க முடியாது. அது அவங்களுக்கே தெரியும். பாலாஜி மோகன் சொல்றமாதிரி நாம சொல்ற சரியான விசயத்த நம்மளயே தப்புனு சொல்ல வச்சி நம்ம வாயாலயே நம்மள லூசுனு சொல்ல வைக்க இறைவிகளால் முடியும். இதுக்காக இறைவன் அப்படினு ஒரு படம் சீக்கரமே அவர் எடுப்பார்னு பாத்தா அவரு மாரீஈஈ 2 னு போயிட்டாரு.
                 அருள் குடிச்ச மாதிரி பேசிட்டா போதுமா. முன்னணி இயக்குனர் கொலை கேஸ்ல உள்ள போனா டிவில போட மாட்டாங்களா. அதை யாழினி பாக்க மாட்டாங்களா.
                கோவலன் கண்ணகி டாப்பிக்லாம் க்ளிசேவ் ஆயிடுச்சு இல்லையா. ஆல்ரெடி மாதர் சங்கம் கோபத்த கிளப்பியாச்சு. இப்ப இலக்கிய சங்க கோபத்தையும் கிளப்பாம இந்த டாப்பிக்கையும் ஸ்கிப் பண்ணிரலாம்.

        இன்னொரு பெரிய டவுட் இந்த சிலை கடத்தல். இதுல எனக்கு புரியாத ஒண்ணு என்னன்னா சிலைக்கு மதிப்பா இல்ல திருடப்பட்ட சிலைக்கு மதிப்பா? சிலைக்குத்தான் மதிப்புனா அருளோட அப்பா அதேமாதிரி ஒரு சிலையை பண்ணிரலாமே. திருடப்பட்ட சிலைக்கு தான் மதிப்புனாலும் இதையே பண்ணலாமே. அது திருடுனதா புதுசா பண்ணுனதானு எப்படி தெரியும். ரெண்டையுமே அவர்தான பண்ணியிருக்கார்? இதில் விசயம் தெரிந்தவர்கள் என்னை தெளிவு படுத்தவும்…

          அப்ப இது மொக்கை படமானு கேக்குறீங்களா. அப்படினா இந்த பதிவ எழுதியே இருக்க மாட்டேன். இதுதான் கார்த்திக் சுப்புராஜோட பெஸ்ட் மூவி ஆஃப் தி த்ரீ அப்டினு அடிச்சி சொல்லலாம். ஒரு படம் யோசிக்க வைக்கணும் அழுக வைக்கணும் எண்டர்டெயினும் பண்ணனும்னு அருள் சொல்ற மாதிரி இந்த படம் எல்லாத்தையும் பண்ணியிருக்கு.

         ஒவ்வொரு கேரக்டரும் அவ்வளவு அழகா மனசுல பதிஞ்சிருக்கு. அருள் யாழினி மைக்கேல் பொன்னி ஜெகன் ரமேஷ் மலர்விழினு பாத்திரப்பெயரெல்லாம் அழகா நியாபகம் இருக்குற மாதிரி வந்த கடைசி படம் எதுனு தெரியல.
           இது என்ன ஜானர்னே தெரியாம படம் எடுத்ததும் பிளஸ்னே வச்சுக்கலாம். சினிமா, குடும்பம்,குடிகார நாய் (நான் சொல்லல,படத்துல அப்படிதான் சொல்றாங்க), பெண் விடுதலை, சிற்பக்கலை,சிலை திருட்டுனு எல்லாத்தையும் கலந்து கட்டி அடிச்சிருக்காரு.
              அருளும் யாழினியும் பிரிஞ்சத நினைச்சு இன்னும் மனசு பாரமா இருக்கு. பொன்னி அந்த குழந்தையை எப்படி வளர்ப்பானு இன்னும் யோசிக்கிறேன். ஜெயில் போயிட்டு வந்து அருள் என்ன பண்ணுவானு யோசிக்கிறேன். The movie have touched somewhere in the heart. அப்பாவோ அம்மாவோ அக்காவோ அண்ணனோ காதலியோ மனைவியோ பிள்ளைகளோ யார் இருந்தாலும் அவங்களுக்கு நாம கொஞ்சம் space தரணும்னு தோண வச்சிருக்கு.

        சுருக்கி சொல்லனும்னா இறைவிகள மட்டுமில்ல நமக்காக வாழுற இறைவன் இறைவி யாரா இருந்தாலும் நமக்காக இல்லைனாலும் அவங்களுக்காகவும் வாழுங்க. சுர்ருனு ஏறிச்சினா காதலன் பட பிரபுதேவா மாதிரி 10 செகண்ட் டைம் எடுத்து பாருங்க. எல்லாம் மகிழ்ச்சியாய் (ரஜினி ரெபரன்ஸ்) நடக்கும். கடைசில என்னையும் கருத்து சொல்ல வச்சிட்டீங்க.

டிஸ்கி 1 : எனக்கு தெரிந்த ஒரு இறைவி சொன்ன கமெண்ட் “படம் ஏதோ போச்சி. க்ளைமேக்ஸ் மட்டும்தான் நல்லா இருந்துச்சு”.
இதைக்கேட்டதும் நான் Men are from Mars Women are from Venus புக்க பிளிப்கார்ட்ல ஆர்டர் பண்ணிட்டேன்.

டிஸ்கி 2 : படமும் பதிவும் ரெண்டுமே சொல்ல வந்தத குழப்பி சொன்னதால மொத்த பதிவையும் கமல் ரெபரன்சா வச்சிக்கலாம். எழுதுன நானே விஜய் ரசிகன்கிறதால இதை தளபதி ரெபரன்சாகவும் வைத்துக்கொளலளலாம்.

Friday, 30 November 2012

                     லெராய் வில்சன் & முல்லை அரசு 

          "முதன் முதல் அழுத சிநேகிதன் மரணம்"- இவ்வரிகளின் ஆழம் கடந்த மாதம் தான் புரிந்தது... நம்முடன் சுக துக்கங்களில் பங்கேற்ற நம் உயிர் நண்பர்களை ஜீவன் அற்ற சடலமாக பார்ப்பது கொடுமை... அந்த  கொடுமை கடந்த மாதம் எனக்கு நடந்தது...அவர்களுடைய உடல் பிரேத பரிசோதனை செய்த பின் துணி போல கண்ணாடி பேழைக்குள் கிடத்த பட்டிருந்தாலும் எழுந்து, வா மனோஜ் என்று கட்டிபிடிக்க மாட்டார்களா என்று ஏங்கினேன்...


            " வானுலகை பார்க்கும் ஆசையினால் 
               ஆதித்தான் அஸ்தமனம் அடைந்தான் 
               உலகை கலி என்னும் 
               காரிருள் சூழ்ந்து கொண்டது"

இப்படித்தான் திருவாலங்காடு செப்பேடுகளில் ராஜராஜனின் தமையன் ஆதித்த கரிகாலனின் மரணம் குறிபிடப்பட்டுள்ளது. தோரயமாக அவனுக்கும் 21 பிரியாயம்  தான் இருக்கும் மரணிதின் போது...இதே வயது தான் என் lerroy மற்றும் முல்லைக்கும்...

                எத்தனை காலமானாலும் உங்களுடன் வாழ்ந்த இந்த 3+ வருடங்கள் நீங்காது என் நினைவை விட்டு...

                கார்க்கி சொன்னது போல ஒருவருடைய வாழ்க்கை என்பது அவர்கள் உயிரோடு  உள்ளவரை மட்டுமே அல்ல...அவர்களுடைய நினைவுகள் அவர்களோடு தொடர்புடைய, வாழ்ந்த எவரேனும் ஒருவருக்கு வரும் வரை  அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

                 அப்படி பார்த்தால் இந்த 1 மாதமும் உங்கள் நினைவு வராத நாட்களே இல்லையடா எங்களுக்கு... ஒரு மாதம் என்ன,உங்களோடு வாழ்ந்த ஒவ்வொருவரும் உயிரோடு உள்ளவரை உங்கள் நினைவுகள் அவர்களை விட்டு போகாதுடா.

          லெராய் வில்சன்

               இந்த பெயரை பெரும்பாலும் பலரும் தவறாக உச்சரிப்பதே வழக்கம்.உன் குணம் வெகு அரிதுடா... யாரையும் மனம் நோக வைக்காத குணம். எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக சிந்தித்து செயல்படுவாய். அளவு கடந்த பொறுமை உனக்கு உண்டு என்று உன்மேல் எனக்கு வருத்தம் உண்டு.ஆனால் உன் வாழ்க்கையில் அந்த பொறுமை எங்கே போனது. தீர்கமான யோசனை எங்கே போனது...வகுப்பிற்கு தினமும் தாமதமாக வரும் நீ வாழ்கையில் மட்டும் சீக்கிரம் போனது ஏன் ?
  
         
          எட்டாம் வகுப்பில் இருந்தே பல இடங்களில் என்னுடன் துணையாக வந்துள்ளாய்  நீ...இப்போது மட்டும் பாதியில் விட்டு சென்றது ஏன்...29 ஆம் ஊருக்கு சேர்ந்து போகலாம் என்று சொன்ன நீ 26 ஆம் தேதியே வானுலகம் சென்றது என்ன நியாயம்...

            முல்லை அரசு 

         அருமையான தமிழ் பெயர்... உன்னுடைய திறமைகளே தனிதான்...அது மிகச்சிலருக்கே வாய்ப்பது. உன்னை போல நடனமாட ஒருவன் பிறந்துதான் வர வேண்டும். அது மட்டுமா, உன் ஓவிய திறமையும் அலங்காரம் செய்யும் திறமையும் யாருக்கு வரும்.

              
            இத்தனை திறமைகளை கண்ட இறைவன் உன்னை தனக்கு அருகில் வைத்து கொள்ள விரும்பினாரோ  என்னமோ... உன்னை போல நல்ல உள்ளம் கண்டிப்பாக நன் இதுவரை சந்தித்த எவருக்கும் இல்லை. ஆனால் எளிதாக ஏமாறுவதும் அவசரமாக நீ எடுக்கும் முடிவுகளுமே உன் மீது என் வருத்தம்.
 

            கண்டிப்பாக lerroy திறமைக்கு ஒரு தலை சிறந்த IIM  கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. CAT முடித்து நீ போன் செய்தது இன்னும் என் காதுகளில் கேட்கிறது.
           
அதே போல முல்லை PLC படித்து பெரிய ஆளாக வருவான் என்று நம்பினேன்.... 


              இரண்டு பேருக்கும் எக்கச்சக்க கனவுகள். கனவுகள் கனவுகளாகவே போய்விட்ட வருத்தம் நமக்கு...            
             
              பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலன் வாயிலாக கல்கி சொல்வார் "இளம் பிராயத்திலே மரணமடைவோர் எப்போதும் மற்றவர் மனதிலே இளமையாக இருப்பர்" என்று... ஆமாம் டா, என்றுமே எங்கள் மனதில் உங்களுக்கு 21 வயது தான்... உங்களுக்கு மூப்பே கிடையாதுடா. 

            என் பிள்ளைகளுக்கு உங்கள் பெயர்   வைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்... ஆனால் அதற்கு சூழ்நிலைகள் இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. பெயர் வைத்தாலும் இல்லை என்றாலும் என் பிள்ளைகள் lerroy போல் முல்லை போல் வளர வேண்டும் என்றே நினைக்கிறேன்...

            உன் நினைவாக உன் குடும்பத்தினர் ஆரம்பித்த அறக்கட்டளை சிறப்பாக வர இறைவனை வேண்டுகிறேன் லெராய். 

             உங்கள் இருவரின் வாழ்க்கையும் விதையாக விதைக்கப்பட்டுள்ளது.
அவை உங்கள் நண்பர்கள் வாழும் வரை வீழாது. பல லெராய்களும் முல்லைகளும் உருவாவார்கள். அவர்கள் நல்ல ஆரோக்கியம் பெற்று 100 ஆண்டு வரை உங்கள் ஆசியோடு வாழ்வார்கள்...  
                  

                  
        

Wednesday, 13 June 2012

எனக்குப் பிடித்தவர்கள் 

                                               எனக்குப் பிடித்த பிரபலங்கள் சிலரைப் பற்றி பார்க்கலாம்...
தற்போது பார்க்க போகும் நால்வரில் மூன்று பேர் அதிகமான விமர்சனங்களை சந்தித்தவர்கள்...  எனக்குப் பிடித்தமானவர்களாய் இருப்பதினாலே இவர்கள் அதிக விமர்சனங்களை சந்தித்தனரா என்று நானறியேன்... என்னுடைய ராசி அப்படி என்றும் வைத்துக் கொள்ளலாம்...
                                              இவர்களைப் பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்று இல்லை... எனக்கு இவர்களைப் பிடிக்க என்ன காரணம் என்று மட்டும் இங்கே பார்க்கலாம்... "ஒருத்தர பிடிக்காததுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம்,ஆனா பிடிச்சதுக்கு காரணம் சொல்ல முடியாது"ன்னு ஒரு படத்துல விஜய் சொன்னதா  ஞாபகம்... இருந்தாலும் நான் இப்ப ப்ளாக் எழுத எதாவது காரணம் வேணும்க்ற ஒரே காரணுத்துக்காக விஜய் அப்டி சொன்ன படத்தையும் அந்த dialogayum நான்  மறந்துட்டேன். இந்த blogஅ  படிக்கனும்கறதால நீங்களும் அத மறந்துடுங்க...
  முன்குறிப்பு: எனக்கு ஓரளவு தமிழ் நல்லாவே எழத வரும்... ஆனா translator ல எழுதுறதால வருகின்ற பிழைகளை மன்னிக்கவும்.

1. விஜய் :

                             முதல் பேர சொன்ன உடனேய தெரிஞ்சிருக்கும்.... தமிழ் சினிமால அதிக விமர்சனங்களயும் அதிக ரசிகர்களையும் கொண்டுள்ள நடிகர்னு இவர சொல்லலாம்... இப்ப powerstar னு ஒருத்தர் வந்துட்டு இருக்கார்... என்னடா  இவனே விஜய ஓட்டுரானேனு பாக்குறீங்களா...  என்னங்க  பண்றது, மத்தவங்க ஓட்ட முன்னாடி நாமளே ஓட்டிகிட்டா  damage கம்மியாகும் பாருங்க  ... ஆனா ஒண்ணுங்க... நான் ஸ்கூல் படிக்கும் வரை விஜய் பத்தி அதிகமா விமர்சனம் வந்தது இல்ல. நானும் ஒன்னும் விஜயோட பெரிய fanum  இல்ல... ஆனா காலேஜ் போனதுக்கு அப்புறம் விஜய ரொம்ப ஓட்டுனாங்க... நானும் பெரிய விஜய் ரசிகராயிட்டேன்... இது என்ன ratio னு  தெரியல... may be indirect proportion ஆ  இருக்கும்னு நெனைக்கிறேன்.
                            
                           நான் ஏன் விஜய் ரசிகரா இருக்கேன்னு ரொம்ப பேரு கேட்ருக்காங்க... நான் ஒன்னும் சுறா பாத்துட்டு விஜய் ரசிகராகலங்க... நாங்கல்லாம் ப்ரியமானவளே , சச்சீன், துள்ளாத மனமும் துள்ளும் பார்த்து விஜய் fan  ஆனவங்க... அவ்ளோ சீக்கிரம் மாத்த முடியாது... சரி வேட்டைக்காரன்,சுறா படம் பாத்துட்டு வேற யாராவது ரசிகர் ஆயிரலம்னு முடிவு பண்ணினா மனுஷன் உடனே காவலன், வேலாயுதம், நண்பன் மாதிரி படம் குடுதுடுறாரு .... நான் என்னங்க  பண்றது... இதுல அடுத்து வேற வரிசையா நல்ல directors படமா வேற வருது... சான்சே இல்லைங்க... இன்னும் 30 வருசத்துக்கு நன் விஜய் ரசிகனாவே இருப்பேன் போல....
                            
         **** நாங்க புகை பிடிச்ச அந்த scena கட் பண்ணிடுறாங்க... இத mankathaல  பண்ணிருந்தா  படமே 10 நிமிசம்தான் வந்திருக்கும்.****

2. தினேஷ் கார்த்திக்:

                             
                                            இவரு பேர சொன்ன உடனே இவன்லாம் பிரபலமானு பாக்காதீங்க... எனக்கு இவர பிடிக்கும்ங்க... தயவு செஞ்சி அப்படி பாக்காதீங்க... நான் விஜய் ரசிகர்னு கூட தைரியமா சொல்லிடுவேன்... ஆனா தினேஷ் கார்த்திக் பிடிக்கும்னு சொன்னா பயங்கரமா  கலைப்பாங்க... நான் ஆரம்பத்துல மறந்துட்டாத சொன்ன அந்த விஜய் dialog கண்டிப்பா இவருக்கு பொருந்தும்ங்க... இவர ஏன் புடிச்சது எதுக்கு புடிச்சதுன்னு கேட்டா என்னிடம் சத்தியமா பதில் இல்லங்க... 

                                             ஆனா எந்த அளவுக்கு இவர புடிக்கும்னு வேணும்னா சொல்லலாம்... த்விட்டர்ல இவரு போட்டோவ dp யா வச்சிருகிற அளவு இவரோட ரசிகருங்க  நான்... எல்லாரும் தமிழ்நாடு டீம்னு  csk ku  சப்போர்ட் பண்ணுவாங்க... இவர டீம்ல எடுக்கலங்கர  ஒரே காரணுத்துக்காக anti-csk ஆனவங்க நானு... இவருக்க first மூணு ipl  DD,அப்புறம் KXIP, இப்ப MI சப்போர்ட் பண்ணிட்டு இருக்கேங்க...  ஆனா பையன் மேல எனக்கு நம்பிக்கை இருக்குங்க... ஆடுற வரை ஆடிட்டு சடகோபன் ரமேஷ் மாதிரி சினிமாக்கு வந்துட்டாலும் ஆச்சர்யம் இல்ல... அப்ப வேனும்ன விஜய மாத்திட்டு இவர் ரசிகர் ஆக வாய்ப்புள்ளது...

**** Got  reply  from him for more than 5 times in twitter ****
                         

3.க்ரிஷ்:

                                        இவரப்  பத்தியும் நம்ம மக்களுக்கு போதுமான வரை தெரிஞ்சுருக்கும்னு நம்புறேன்... முதல்ல தெரியாதவங்களுக்கும் இவரோட கல்யாணத்துக்கு அப்புறம் இவர தெரிஞ்சுருக்கும்... மத்த ரெண்டு பேரு மாதிரி தாங்க இவரும்... விமர்சனங்கள் பல உண்டு இவர் மேல... சாருக்கு சங்கீதமே வராது,வெட்டி scene  போடுவாருன்னு பலர் சொல்லி நானே கேட்டது உண்டு...
ஆனா 100 வாய்ஸ் குடுத்து கண்டு பிடிக்க சொன்னாலும் இவர் வாய்ஸ் அ கரெக்டா கண்டுபிடிச்சுடுவேன்... இவரு பாடுனாருங்ர  ஒரே காரணுத்துக்காகவே யாருமே கேக்காத முத்திரைனு ஒரு  படத்தோட  பாடல்களையும் டவுன்லோட் செஞ்சி வச்சிருக்கேன்...
                                        இவர எந்த அளவு பிடிக்கும்னா  ஆர்குட்ல என் profile போட்டோவே சாரோடது தான். இதுல வேடிக்கை என்னன்னா சாரும் பயங்கரமான விஜய் fan... இது எனக்கே late ஆதான் தெரிஞ்சது... அப்புறம் சார் இந்தியன் born அமெரிக்கன் வளர்ப்பு... கம்ப்யூட்டர் சயின்ஸ் ட்ராப் அவுட்... கூடிய விரைவில் வெள்ளித்திரையில் சார எதிர்பார்க்கலாம்.

***பல முறை த்விட்டேர் மூலம் reply வாங்கியுள்ளேன்... சில முறை என் த்வீட்சை சார் RT பண்ணியதும் உண்டு***

4.மதன் கார்க்கி :

 

                                             எனக்குப்  பிடித்த பிரபலங்களுள் அதிக விமர்சனங்களை சந்திக்காதவர் இவர்... அதனாலே இவர்  கொஞ்சம் ஸ்பெஷல். இவரைப்  பிடிப்பதற்கு என்னால் ஓரளவு காரணம் சொல்ல முடியும்... இவர் சார்ந்துள்ள துறை ஒரு பெரிய காரணம்... ஆமாம்... சார் ஒரு எஞ்சினியர்... பாடலாசிரியர் + விரிவுரையாளர் என்ற இரு பணிகளிலும் சிறப்பாக செயல்படுகிறார்... அதுவே இவரது சிறப்பு... என்னமோ ஏதோ மற்றும் அஸ்கா லஸ்க வரும் முன்னரே சார் எனது favourite ஆவார்...மற்ற மூவரை விட இவர் மீது நம்பிக்கை அதிகம்... எங்கு வேண்டுமானாலும் பெருமையாக சொல்வேன் நான் karkkyin ரசிகன்  என்று...

*** சாரிடமும் நந்தினி மேடமிடமும் பல முறை பேச த்விட்டேர் வாய்ப்பளித்துள்ளது...***









Sunday, 10 June 2012

Intro

                 ஆன்றோருக்கும் சான்றோருக்கும் என்னைப் போன்றோருக்கும் வணக்கம்ங்க த்விட்டேர்ல பல பேரு என்னை பிளாக் செய்துள்ளனர். அந்த பிளாக் மட்டுமே தெரிஞ்ச நமக்கு blog னே தனியா ஒண்ணு இருக்குனு சொன்னங்க.. சரி அது என்னனு தெரிஞ்சிக்கலாம்னு பாத்தா  அத பத்தி தலையும் தெரியல வாழும் புரியல... இருந்தாலும் நமக்கு தெரியாத விசயத்த பத்தி தன அதிகம் ஆர்வம் இருக்கும்னு சொல்லுவாங்க... அதனால இதுல என்னதான் இருக்குனு தெரிஞ்சே அஹானும்னு முடிவு பண்ணிட்டேன். நாம வேற விஜய் ரசிகர் ஆச்சா... அதனால ஒரு வாட்டி முடிவு செஞ்சிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்ல... அதனால ஒரு வழிய blog வந்துட்டேன்... இனிமே ஆகப்போற எந்த விளைவுகளுக்கும் கம்பெனி பொறுப்பு ஏற்கதுங்க...