Sunday, 5 June 2016

                         இறைவி

               வீட்டில் யாருமில்லாத ஒரு சனிக்கிழமை இரவில் தூக்கம் வராமல் நள்ளிரவு 2 மணி வரை புரண்டு பின்பு ஞாயிறு காலை என்றும் பாராமல் 6 மணிக்கு அலாரம் வைத்து அது அடிக்க முன்னாடியே 4 மணிநேர அதீத தூக்கம் கலைந்து எழுந்தது உண்டா? அப்படி எழுந்து சாப்பிடக்கூட செய்யாமல் பேருந்து ஏறி 20 கிமீ தூரம் போய் ஒரு படம் பார்த்தது உண்டா? அப்படி பார்த்த படம் நல்லதோ கெட்டதோ கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அல்லவா? அதன் விளைவுதான் இந்த பதிவு.

                 அப்படி நீங்கள் மேலே சொன்னதை ஆமோதிக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம். நல்லா ஹேங்ஓவர்ல ஒரு படம் பார்த்துவிட்டு தூக்கம் வராத ஒரு தனிமையான ஞாயிறு மதியம் அன்று புஃல் டேட்டா பேக்குடன் மொபைலும் அதில் தமிழ் டைப்பிங்கும் உங்களுக்கென்று ஒரு கூகுல் பிளாக்கும் அதை சேர் செய்ய நாலு வாட்சாப் க்ரூப்பும் அதை படிக்க நாலு நண்பர்களும் இருக்கிறது என்றால் நீங்கள் அந்த படத்தை பற்றி மொக்கையாகவோ அல்லது மிக மொக்கையாகவோ ஒரு பதிவு எழுதுவீர்கள் அல்லவா. (என்னது எழுத மாட்டீர்களா… அட போங்கப்பா… நான் எழுதுவேன்.) அதுதான் இது.
             இந்த படத்தை பார்த்து விட்டு கார்த்திக் சுப்புராஜுக்கு ட்விட்டர்ல மென்சன் போட்டு அண்ணே இத்தன நாள் தூங்கிட்டு இருந்த என் அறிவுக்கண்ண நீங்க தொறந்துட்டீங்கனு சொன்ன கேட்டகரி நீங்கனா இந்த பதிவு உங்களுக்கானது இல்லை. பெண்களை தாயா மதிக்கணுமா அப்ப நாங்க என்ன நாயாவாடா மதிக்கிறோம்னு சொன்னீங்கனா ஐ ஆம் வெரி சாரி இது உங்களுக்கும் இல்ல.
படம் ஆரம்பிச்சி 3 மணிநேரம்… இல்ல இல்ல… படம் முடிஞ்சி 5 மணிநேரம் ஆகியும் இது என்ன ஜானர் படம்னே தெரியாம நான் குழம்பிட்டு இருக்கிற மாதிரி இந்த பதிவ படிச்சிட்டு நீங்களும் குழம்பக்கூடாது அப்படிங்கறதால டக்குனு (சரி சரி ஆல்ரெடி 2 பாரா போயிடுச்சு விடுங்க) ஜம்ப் ஆயிரலாம்.

 

              ஆரம்பம் (தல ரெபரனஸ்) எப்படி இருந்தாலும் க்ளைமாக்ஸ்ல ஒரு ஹேப்பி எண்டிங் வைக்கணும்னு எதிர்பாக்குற சராசரி தமிழன்தான் நானும். படம் முடிஞ்சி வெளிய வரப்ப ஒரு மனநிறைவோட வரணும். அப்படி வர முடியாதுங்கறதால தான் பாலா படத்தலாம் ட்விட்டர்ல சிலாகிக்கறதோட நிறுத்திப்பான் தமிழன். தியேட்டர் பக்கம் எட்டி பாக்க மாட்டான். அப்படி பண்ணலனா வெள்ளித்திரை படத்துல சொல்ற மாதிரி Art Film பண்ணியிருக்குற போலனு மூஞ்ச திருப்பிட்டு போயிருவான். இந்த விஷயத்துல கா.சுப்புராஜ் சருக்கியிருக்கலாம். பட் நான் முதல்ல படத்துல எனக்கு நெகட்டிவ்வா தெரிஞ்சத முதல்ல சொல்லிட்டு அப்புறம் பதிவோட க்ளைமேக்சுல ஹேப்பி எண்டிங்க வச்சுக்கலாம்.
             படத்துல மிகப்பெரிய சருக்கல் நெருடல்னு நான் நினைக்குறது படத்தோட க்ளைமேக்ஸ்தான். கிளி மாதிரி படம் எடுத்துட்டு அதுக்கு குரங்கு மாதிரி ஒரு க்ளைமேக்ஸ். ஆர்ட் கேலரிக்கு ஒரு பின்பக்க கதவு வச்சிட்டு ஜெகன் வந்தப்ப மைக்கேல் அந்த பின் பக்க கதவு வழியா போயிடுற மாதிரி வச்சிருந்தா என்ன தப்புனு தெரியல. அந்த மனிதி பாட்டு வேணும்னா வைக்க சீன் இல்லாத போயிருக்கும்.
                க்ளைமேக்ஸ்ல S.J.சூர்யா ஆண் பெண் நெடில் குறில் லெக்சர் படத்தோட ஒட்டுதுனு நினைக்கிற கேட்டகரி நீங்கனா தயவு செய்து 4,5 உலகப்படம் எனக்கு பார்சல் செய்யுங்க. நானும் பாத்து பக்குவப்படுறேன். இத ஏன் சொல்றேனா படத்துல காட்டப்படுற அருளோ மைக்கேலோ அந்த வசனத்துக்கு ஏத்த அளவு பெண்கொடுமை பண்ணாதவங்க. தனக்கு அவ்வளவு பிரச்சனை வந்தாலும் மனைவி மகளோடும் பாசமாக இருக்க போராடும் அருள்தானே அவன். தான் கல்யாணம் செய்ய நினைத்த மலரோடு வாழ முடியாமல் நிர்பந்தத்தால் பொன்னியை திருமணம் செய்தாலும் இப்போது பொன்னியையும் மகளையும் வைத்து பாசத்தோடு வாழ நினைக்கும் மைக்கேல்தானே அவன்.
             மைக்கேல் விசுவாசத்துக்கும் அருள் சுர்ருனு ஏறிடுச்சு அதான் பண்ணிட்டேன்னு சொல்ற காரணத்துக்கும் ஆண் பெண் என்ற பேதம் உண்டா. குட்டிப்புலி சின்னக்கவுண்டர் தாமிரபரணினு பல படங்கள்ள இறைவிகளும் இந்த விசயங்கள பண்ணியிருக்காங்க இல்லையா.
                மலர்விழி கதாப்பாத்திரத்த பாசிட்டிவ்ல சேக்கவா இல்ல நெகட்டிவ்ல சேக்கவானு குழப்பமா இருக்கு. கார்த்திக்கும் இதே குழப்பம் இருந்துருக்குமா தெரியல. படம் U/A பட் இந்த பதிவு U. அதனால் இதை இப்படியே விட்டுரலாம்.
                 பொஸஸிவ்னஸ்லயும் கணிக்க முடியாத மனநிலை மாற்றத்துலயும் பொண்ணுங்கள அடிச்சிக்க முடியாது. அது அவங்களுக்கே தெரியும். பாலாஜி மோகன் சொல்றமாதிரி நாம சொல்ற சரியான விசயத்த நம்மளயே தப்புனு சொல்ல வச்சி நம்ம வாயாலயே நம்மள லூசுனு சொல்ல வைக்க இறைவிகளால் முடியும். இதுக்காக இறைவன் அப்படினு ஒரு படம் சீக்கரமே அவர் எடுப்பார்னு பாத்தா அவரு மாரீஈஈ 2 னு போயிட்டாரு.
                 அருள் குடிச்ச மாதிரி பேசிட்டா போதுமா. முன்னணி இயக்குனர் கொலை கேஸ்ல உள்ள போனா டிவில போட மாட்டாங்களா. அதை யாழினி பாக்க மாட்டாங்களா.
                கோவலன் கண்ணகி டாப்பிக்லாம் க்ளிசேவ் ஆயிடுச்சு இல்லையா. ஆல்ரெடி மாதர் சங்கம் கோபத்த கிளப்பியாச்சு. இப்ப இலக்கிய சங்க கோபத்தையும் கிளப்பாம இந்த டாப்பிக்கையும் ஸ்கிப் பண்ணிரலாம்.

        இன்னொரு பெரிய டவுட் இந்த சிலை கடத்தல். இதுல எனக்கு புரியாத ஒண்ணு என்னன்னா சிலைக்கு மதிப்பா இல்ல திருடப்பட்ட சிலைக்கு மதிப்பா? சிலைக்குத்தான் மதிப்புனா அருளோட அப்பா அதேமாதிரி ஒரு சிலையை பண்ணிரலாமே. திருடப்பட்ட சிலைக்கு தான் மதிப்புனாலும் இதையே பண்ணலாமே. அது திருடுனதா புதுசா பண்ணுனதானு எப்படி தெரியும். ரெண்டையுமே அவர்தான பண்ணியிருக்கார்? இதில் விசயம் தெரிந்தவர்கள் என்னை தெளிவு படுத்தவும்…

          அப்ப இது மொக்கை படமானு கேக்குறீங்களா. அப்படினா இந்த பதிவ எழுதியே இருக்க மாட்டேன். இதுதான் கார்த்திக் சுப்புராஜோட பெஸ்ட் மூவி ஆஃப் தி த்ரீ அப்டினு அடிச்சி சொல்லலாம். ஒரு படம் யோசிக்க வைக்கணும் அழுக வைக்கணும் எண்டர்டெயினும் பண்ணனும்னு அருள் சொல்ற மாதிரி இந்த படம் எல்லாத்தையும் பண்ணியிருக்கு.

         ஒவ்வொரு கேரக்டரும் அவ்வளவு அழகா மனசுல பதிஞ்சிருக்கு. அருள் யாழினி மைக்கேல் பொன்னி ஜெகன் ரமேஷ் மலர்விழினு பாத்திரப்பெயரெல்லாம் அழகா நியாபகம் இருக்குற மாதிரி வந்த கடைசி படம் எதுனு தெரியல.
           இது என்ன ஜானர்னே தெரியாம படம் எடுத்ததும் பிளஸ்னே வச்சுக்கலாம். சினிமா, குடும்பம்,குடிகார நாய் (நான் சொல்லல,படத்துல அப்படிதான் சொல்றாங்க), பெண் விடுதலை, சிற்பக்கலை,சிலை திருட்டுனு எல்லாத்தையும் கலந்து கட்டி அடிச்சிருக்காரு.
              அருளும் யாழினியும் பிரிஞ்சத நினைச்சு இன்னும் மனசு பாரமா இருக்கு. பொன்னி அந்த குழந்தையை எப்படி வளர்ப்பானு இன்னும் யோசிக்கிறேன். ஜெயில் போயிட்டு வந்து அருள் என்ன பண்ணுவானு யோசிக்கிறேன். The movie have touched somewhere in the heart. அப்பாவோ அம்மாவோ அக்காவோ அண்ணனோ காதலியோ மனைவியோ பிள்ளைகளோ யார் இருந்தாலும் அவங்களுக்கு நாம கொஞ்சம் space தரணும்னு தோண வச்சிருக்கு.

        சுருக்கி சொல்லனும்னா இறைவிகள மட்டுமில்ல நமக்காக வாழுற இறைவன் இறைவி யாரா இருந்தாலும் நமக்காக இல்லைனாலும் அவங்களுக்காகவும் வாழுங்க. சுர்ருனு ஏறிச்சினா காதலன் பட பிரபுதேவா மாதிரி 10 செகண்ட் டைம் எடுத்து பாருங்க. எல்லாம் மகிழ்ச்சியாய் (ரஜினி ரெபரன்ஸ்) நடக்கும். கடைசில என்னையும் கருத்து சொல்ல வச்சிட்டீங்க.

டிஸ்கி 1 : எனக்கு தெரிந்த ஒரு இறைவி சொன்ன கமெண்ட் “படம் ஏதோ போச்சி. க்ளைமேக்ஸ் மட்டும்தான் நல்லா இருந்துச்சு”.
இதைக்கேட்டதும் நான் Men are from Mars Women are from Venus புக்க பிளிப்கார்ட்ல ஆர்டர் பண்ணிட்டேன்.

டிஸ்கி 2 : படமும் பதிவும் ரெண்டுமே சொல்ல வந்தத குழப்பி சொன்னதால மொத்த பதிவையும் கமல் ரெபரன்சா வச்சிக்கலாம். எழுதுன நானே விஜய் ரசிகன்கிறதால இதை தளபதி ரெபரன்சாகவும் வைத்துக்கொளலளலாம்.