Sunday, 30 April 2017

பாஹுபலியும் மற்றும் சிலரும்

          அமெரிக்கா வந்துவிட்டு தமிழ் கன் மற்றும் youtube இருந்தும் முதல் நாளே பிரிண்ட் வந்தும் அடம்பிடித்து தியேட்டர்ல போய்  பார்த்த படம் பத்தி கொஞ்சமாயினும்  சொல்ல வேண்டும் இல்லையா ... அதன் விளைவு தான் இந்த பதிவு.

          முதலில் ராஜமௌலி என்னும் பிம்பம் விக்ரமார்க்கடு ஆகட்டும் மகதீரா ஆகட்டும் நான் ஈ ஆகட்டும் இல்லை மரியாதை ராமண்ணா ஆகட்டும் , கதை சொல்லும் விதத்தில் என்னை கவர தவறியதே இல்லை.

                                    A still from the film. Image via Youtube.

          மேலே சொன்ன எந்த படத்தையும் திரை அரங்கில் சென்று பார்த்தது இல்லை பாஹுபலி 1 உட்பட. இது எல்லாம் மகா பாவ செயல் என்று விஷால் நினைத்தால் அதை இந்த படம் பார்த்து கழுவி கொண்டேன் ... இந்த பாவியை விஷால் மன்னிப்பாராக.

          பிரமாண்டத்தை  விட சில உணர்ச்சிகரமான நிகழ்வுகளால் மட்டுமே படம் இன்னும் மனதில் நிற்கிறது. தேவசேனா - சிவகாமி முதல் சந்திப்பின் போது பாஹுபலியின் செயல் , மகிழ்மதி இளைப்பாறும் இடைவேளை, சேனாதிபதி தண்டனை, மகேந்திர பாஹுபலி அறிமுகம் ஆகியவை குறிப்பிட தக்கவை. பனை மர சண்டை,

                                    Image result for baahubali 2

            யானை அடக்குதல், தேரை தூக்குதல்  எல்லாம் தவிர்த்து பார்த்தால்   சண்டை காட்சிகளும் மாட மாளிகைகளும் சற்றும் குறை சொல்ல தகுதி அற்றவை. இது கண்டிப்பாக பட விமர்சன கட்டுரை அல்ல. படம் கண்டிப்பாக திரை அரங்கில் பார்க்க முழு தகுதியான ஒன்று. தாராளமாக பாருங்கள்.

                                       Image result for baahubali 2

இந்த இடம் தான் கட்டுரையில் முக்கியமான ஒன்று. மனச திடமா வச்சிக்கோங்க. மேற்கொண்டு இந்த கட்டுரையை 3 பகுதிகளாக பிரிப்போம்.


1. ராஜமௌலியும் சங்கரும் :


                                              Image result for rajamouli shankar

            ராஜமௌலி ஆகட்டும் ஷங்கர் ஆகட்டும் கதை சொல்லும் விதத்திலோ காட்சி படுத்தும் விதத்திலோ ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை. இந்த காம்பரிசின் தேவை அற்றது. பாஹுபலி பிரமாண்டம் பேசுபவர்கள் எந்திரனின் நேர்த்தியை மறந்து விடுகிறார்கள்.

                                                Image result for endhiran

           கதை சொல்லும் விதத்தில் ஐ படம் சறுக்கல் தான். சுஜாதா இல்லாத ஷங்கர் மீண்டு வர காலமாகும். அது நடக்கும் வரை அமைதி தேவை. விஜயேந்திர பிரசாத் இல்லாத ராஜமௌலி இன்னும் வரவில்லை. அதனால் கதை எழுதுவதில் அவர் பெரிய சவாலை  சமாளிக்கவில்லை. இதே கதையை ஷங்கர் பண்ணியிருந்தால் கண்டிப்பாக இதே அளவோ அல்ல இதை விட மேலாகவோ பண்ணியிருப்பார். ஷங்கர் ராஜமௌளியிடம் கற்க வேண்டியது எதற்கு செலவு செய்ய வேண்டும் என்பது. புது LED டிவி உடைப்பதோ புது ஆடி கார் உடைப்பதோ பிரமாண்டம் இல்லை என்று உணர வேண்டும்.

                                            Image result for vijay nanban king

            ஒரு விஷயம் பாராட்ட வேண்டியது கதை களம். Outdated என்று நாம் சொல்லும் மன்னர் காலத்து கதையை தைரியமாக எடுத்த நம்பிக்கை. இதில் பாராட்டப்பட வேண்டியது ராஜமௌலி மட்டும் அல்ல , தெலுகு ரசிகர்களும் தான். பாஹுபலி திறந்து விட்ட இந்த கதவில் தமிழிலும் நுளைந்து செல்வார்கள் என்று நம்புவோம்.  



2. பாஹுபலியும் ஆயிரத்தில் ஒருவனும் :


                                       Image result for aayirathil oruvan

             மேலோட்டமாக பார்த்தால் இது மட்டமான மதிப்பீடாக தெரியலாம். இல்லை நியாயமான கோபமாகவும் தெரியலாம். எனக்கு தெரிந்து புதுப்பேட்டை ஆகட்டும் ஆயிரத்தில் ஒருவன் ஆகட்டும் , இரண்டையும் பார்க்காமலே அவற்றை தீண்ட தகாத பொருளாக பார்ப்பவர்கள் அதிகம். ஒரே ஒரு முறை இரண்டையும் பாருங்கள் என்பதே தாழ்மையான வேண்டுகோள். கண்டிப்பாக பாஹுபலியின் உழைப்பும் தரமும் பணமும் வியாபாரமும் ஆயிரத்தில் ஒருவனை விட பாஹுபலி - பல்லாளதேவன்  அளவு அதிகம். அனால் கதை என்று எடுத்து கொண்டால் கன்டென்ட் என்று பார்த்தால் ஆயிரத்தில் ஒருவன் ஒருபடி இல்லை பல படி மேல் .

                  Image result for chola entry aayirathil oruvan
              ஆயிரத்தில் ஒருவன் மேல் எனக்கு பல கருத்து வேறுபாடு உண்டு. கண்டிப்பாக சோழ வரலாறு அறிந்த பண்பாடு அறிந்த எவருக்கும் அதில் காட்டப்பட்ட முறை உடன்பாடு இல்லாத ஒன்று. அனால் அது ஒரு தவிர்க்க முடியாத படம். ஒரு அசாதாரண நம்பிக்கை கொண்ட ஒரு இயக்குனர் எடுத்த படம். செல்வா மட்டுமே எடுக்க கூடிய படம்.

              சொந்த நாடிழந்த வாழ்க்கை இழந்த வெளி உலக தொடர்பிழந்த உலகின் நாகரிக மூத்த குடி அவ்விதம் ஆகியிருக்க வாய்ப்பு இல்லை என்று யாராலும் கூற முடியாது. அசாதாரணமான , அதே சமயம் மிகவும் வாய்ப்பு இருக்க கூடிய கற்பனை அது.

           
         
             படத்தை ஒரே வார்த்தையில் psycho படம் என்பவர்கள் ஒரே ஒரு முறை பாருங்கள். Atleast மேலே உள்ள  இந்த காணொளி மட்டுமாவது பார்த்தால் நல்லது.   மன்னன் என்றால் தங்க நகை அணிந்து பட்டாடை அணிந்து சிறப்பாக வாழ்பவர்கள் என்ற மாயை உடைத்து ரத்தமும் சதையுமாக பாருங்கள். தூதுவன் வருவான் மாறி பொழியும் என்று fantasy மற்றும் வரலாற்றுக்கு இடையில் செல்வா சறுக்கியது உண்மை. படத்தில் 1000 குறைகள் உள்ளது. அனால் அந்த படம் பெற வேண்டிய மரியாதையை பெறவில்லை என்பதே உண்மை. மொழி புரிய வில்லை என்றால் தமிழுக்கே subtitle வைத்தாவது பாருங்கள்.

             மக்களுக்கு பிடித்ததாக சொல்லி ஏமாற்றி படம் பார்க்க வைக்காமல் திட்டினாலும்  மக்கள் ரெண்டு நாள் சிந்திக்கட்டும் என்ற வகை படம் அது. ஆயிரத்தில்  ஒருவனுக்கு குறைந்த பட்ச வரவேற்பு குடுத்து இருந்தாலும் சோழனின் பயணம் தொடர்ந்து இருக்கும். தமிழிலும் பல பாஹுபலிகள் வந்திருப்பார்கள்.

3. பாஹுபலியும் அருள் மொழி வர்மரும் :

               ஆயிரம் யானை லட்சம் குதிரை வைத்திருக்கும் கற்பனை பாத்திரம் பாகுபலியை சிலாகிக்கும் நாம் அதை விட பல மடங்கு சேனை வைத்திருந்த ரத்தமும் சதையுமாக வாழ்ந்த தெற்கு ஆசியாவிலே மிகப்பெரிய  கடற்படை கொண்டு பல அண்டை நாடுகள் வென்ற அருள்மொழி வர்மர் alais ராஜ ராஜ சோழனை மறந்து விட்டோம் .

                               Image result for ponniyin selvan

               கல்கியின் அற்புதம் பொன்னியின் செல்வனை படமாக்க MGR முதல் மணிரத்னம் வரை எவருக்கும் நாம் முழு தைரியம் தரவில்லை. பொன்னியின் செல்வன் படித்த அனைவர்க்கும் தெரியும் சிவகாமி தேவி எண்பது செம்பியன் மாதேவியின் பாத்திரம் என்பது.

                                         Image result for baahubali hand
மகேந்திர பாஹுபலி - சிவகாமி காப்பாற்றியது ஊமை மந்தாகினி காவேரி நதியில் செய்த சம்பவம்.

               பாஹுபலி ராஜ்ஜியம் துறந்தது கற்பனை. திருவாலங்காடு செப்பேடு கூறுவது உண்மை. மக்கள் அனைவரும் ராஜா ராஜரை தலைமை ஏற்க விரும்ப அவரோ மதுராந்த உத்தம சோழரை மன்னராக்கிய சம்பவம் உண்மை. அமரேந்திர பாஹுபலி மரணம் - ஆதித்த கரிகாலன் மரணம். பல கதைகளுக்கும் சம்பவங்களுக்கும் பொன்னியின் செல்வன் ஆதாரமாக இருந்துள்ளது. ராஜமௌலியே சொல்லியும் இருக்கிறார் இதை.    
                                               
                                         Image result for padayappa neelambari nandhini 

              படையப்பா நீலாம்பரி பொன்னியின் செல்வனின் நந்தினி என்றும் அதுவே படையப்பா முழு கதைக்கும் ஆரம்பம் என்றும் ரஜினி சொல்லியிருக்கிறார். கதையாக பார்த்தால் பாஹுபலி ஒரு சிறு துளி. பொன்னியின் செல்வனை எடுத்தால் இதை போல பல மடங்கு எடுக்கலாம். படம் எடுக்க இயக்குனர் தயங்கவில்லை, தயாரிப்பாளர் தயார், தொழில்நுட்பமும் தயார். அனால் மிகப்பெரிய கேள்வி. பார்க்க நாம் தயாரா. பாகுபாலிக்கு குடுத்த வரவேற்பை நம் சொந்த உண்மையான வரலாற்றிற்கு குடுக்க தயாரா. தந்தால் மகிழ்மதி போன்ற அதை விட பெரிய தஞ்சை சாம்ராஜ்யத்தின் மத்தியில் விஜயேந்திர சோழ குல மன்னர்கள் ஆதித்தனும் அருள்மொழி வர்மனும் வாணர் குல வந்தியத்தேவனும் நம்மை சந்திக்க விரைவில் வருவார்கள்.



Image result for thanjavur temple


    ஜெய் மகிழ்மதி. வீர வேல் . வெற்றி வேல் .