காட்சி 1 : சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் [1989]
காட்சி 2: யாரு நீங்க? நான்தான்பா ரஜினிகாந்த் [2018]
இந்த காட்சிகளுக்கு சிறிது நேரம் கழித்து வரலாம். சமூக விரோதி என நம்மை சொன்ன ஒருவரின் படத்திற்கு போக கூடாது என்பவர்கள் அனைவரும் என்னை மன்னிப்பார்களாக. காலா பார்த்தாயிற்று. இது பட விமர்சனம் தான். அனால் அதையும் தாண்டி இது ஒரு நல்ல கருத்து விவாதத்திற்கு அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கலாம்.
பீம்ஜி ரஞ்சித் :
திரைப்படம் என்பது என்ன, எதற்காக என்பது ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறுபடும். ஒரு சிலருக்கு அது சிரிப்பை வரவழைக்க, ஒரு சிலருக்கு அது தன ஆதர்ச நாயகனை வழிபட, ஒரு சிலருக்கு அது சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாய் பார்க்க. படம் பார்க்கும் ரசிகனுக்கே இப்படி என்றால் படம் எடுக்கும் கலைஞனுக்கு அது எப்படி வேறுபாடும் என சொல்ல வேண்டியதில்லை. அந்த வகையில் ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தவிர்க்க கூடாத ஒரு இயக்குனர்.
சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றான் பாரதி. இது உண்மையாக வேண்டும் என்பது உண்மை தான். அனால் இது யாருக்கு பொருந்தும் என்பது கேள்வி. ரஞ்சித்தை சாதி இயக்குனர் என முத்திரை இடுவது மிக கொடுமை. பாரதி சொன்ன அந்த வார்த்தை உண்மை அனால் அது பெரும் நன்மை தரக்கூடியயது ரஞ்சித் போன்ற மக்களுக்கு தான். அப்படி இருக்க அவர் ஏன் சாதி இருக்கிறது என சொல்கிறார் என்பது ஆராய வேண்டியது. சாதியும் அதன் கொடுமைகளும் இருக்க கூடாது என்பது உண்மை. அனால் இருக்கும் ஒன்றை இல்லை என்று கடந்து விட முடியாது.
வெளி வந்த கச்சநத்தமும் வெளி வராத பல கொடுமைகளும் இருக்கும் காலத்தில் பாரதியின் அந்த பாடல் மருது, கொம்பன், தேவராட்டம் என்று கொம்பு சீவிடும் மக்களுக்கும், பதவி இருக்கும் ஆணவத்தில் ஆட்டமிடும் தன்னை தானே மேன் மக்கள் என சொல்பவர்களுக்கும், இடையில் இருப்பதால் தன்னை ஆதிக்க இனமாக எண்ணியும் அதே சமயம் பிற்படுத்த பட்டதாக சொல்லி சலுகையும் பெரும் மக்களுக்குமே மிக அவசியம் ஆகிறது.
மாட்டு கறி சாப்பிடுவது தங்கள் வாழ்வின் ஒரு அங்கம் என அட்டைக்கத்தியில் ஆரம்பித்தவர், மெட்ராஸ் படத்தில் பேசிய அரசியல் மிக பெரியது. கபாலியில் அரசியல் இருந்தாலும் அது ரஜினியை வித்யாசமாக பார்க்கிறோம் என்ற எண்ணத்தையே ரசிகனிடம் அதிகம் விதைத்தது. காலா ஒரு படமாகவும் அரசியலை நெற்றி பொட்டில் அடித்த விதமாகவும் கபாலியை விட மேல். ரஜினியாகவே இருந்தாலும் தான் சொல்ல வருவதை தான் சொல்வேன் என்ற மாத்திரத்தில் ரஞ்சித் ஒரு வெற்றியாளர் தான்.
காலா - ஒரு திரைப்படம்:
அட்டைக்கத்தியும் மெட்ராஸ் படமும் அரசியல் பேசியது என்பதே தெரியாமலே , வெகு ஜன மக்கள் பலரும் அந்த படங்களை விரும்பினர். அரசியல் தவிர்த்து பார்த்தாலும் அந்த படங்கள் சிறந்த கதை, திரைக்கதை கொண்டவை. கபாலி கூட ரஜினி என்னும் பிம்பத்தை மாற்றி காட்டிய வகையில் ஏற்று கொள்ளலாம். அனால் காலாவில் ரஜினியையும் இந்துத்வ எதிர்ப்பு அரசியலையும் கழித்து விட்டால் படமாக என்ன மிச்சம் இருக்கிறது என்பது ரஞ்சித்திற்கே தெரியும். ரஜினியும், நானாவும், சந்தோஷ் இசையுமே படத்தை காப்பாற்றி இருக்கிறது .
ஒரு இயக்குனராக வெற்றி பெறுவதை விட ஒரு புரட்சியாளனாக வெற்றி பெறுவதையே அதிகம் விரும்புவதாக இருந்தால் வாழ்த்துக்கள். அனால் அப்படி முடிவெடுத்தால், வணிக சமரசத்திற்காக ரெயின் பைட் , தங்க சீலை பாட்டு தேவை இல்லையே. இரட்டை குதிரை சவாரியை தவிர்த்தால் நலம். ரஜினி இல்லாத அடுத்த படம் எடுக்கும் போது கதைக்கும் கொஞ்சம் முக்கியம் கொடுப்பார் என்று உறுதியாக நம்புவோம்.
ராவண காவியம்:
படத்தில் தலித் அரசியல் விட இம்முறை இந்துத்வ எதிர்ப்பே தூக்கி இருக்கிறது. இந்துத்வ எதிர்ப்பு நாடு முழுக்க உச்சத்தில் இருக்கும் இந்த காலத்தில் இதில் பெரும் ஆச்சர்யம் இல்லை. ராமரை வில்லனாகவும் ராவணனை நாயகனாகவும் காட்டும் ராவண காவிய குறியீடுகள் படம் நெடுக உள்ளது. ராமரை வழிபாடும் நாயகன், வால்மீகி பகடி, பத்து தலை ராவணன் பாட்டு, காலா வீடு எரியும் போது இலங்கை எரித்த அனுமன் குறியீடு , நானாவின் அடியாளை அனுமனாகவே காட்டியது, அனைத்திற்கும் உச்ச பட்சமாக பட இறுதியில், ராமர் காவியம் பாடி ரஜினியை வதைப்பது என்று. ஆன்மிக அரசியல் வாதியை வைத்தே இதை செய்ததுற்கு வாழ்த்துக்கள் ரஞ்சித்.
இறுதியில் வண்ண பொடியில் பெரியாரின் கருப்பு, கம்யூனிஸ்ட்களின் சிவப்பு, அம்பேத்கரின் நீலம் என தூவியுள்ளார். இது தவிர காலாவை கலைஞருடன் ஒப்பிட்டு ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. காலா - கருணாநிதி, மனைவி, துணைவி, மூத்த மகன் தளபதி, மகன் பெயர் ரஷ்யா புரட்சியாளன் பெயர் என ஒரு குறியீட்டு விளக்கம். அட ஆமாம் சரியாக இருக்கிறதே என்று தோன்றும். இப்படி ஒவ்வொரு ரசிகனும் ஒவ்வொரு பார்வையினை படத்தில் பார்க்கலாம்.
பிம்பங்களின் உடைபாடு:
எவ்வளவு தான் சரி செய்தாலும் இடிந்து விழும் சென்னை விமான நிலைய கண்ணாடி போல் நாம் மனதில் வைத்திருக்கும் பலருடைய பிம்பங்களும் ஒரு நாள் உடை படும். நாம் பெரிதும் மதிக்கும் பெருமையின் சிகரமாக நினைக்கும் தஞ்சை பெரிய கோவிலின் மறுபக்கமும் உள்ளது. ராஜ ராஜன் அக்கோயிலை ஒரு வணிக நோக்கமாகவும், தன் பெருமை போற்றவுமே செய்தான் என்றும் ஒரு குறிப்பிட்ட மேன் மக்கள் இனத்தின் அடிவருடியாக இருந்தான் என்றும், அப்படி இல்லாமல் இருந்ததாலே ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டான் என்றும் ஒரு கருத்து உள்ளது. அதை போல் ராம ராவணன் பிம்பமும் ஒரு நாள் உடை பட வாய்ப்புள்ளது. அவ்வளவு ஏன் நம் காலத்திலே நாம் எல்லாரும் பார்க்கவே ஒரு பிம்பம் சுக்கு நூறாக உடை பட்டுள்ளது. யாரென்று தெரியவில்லை என்றால் கட்டுரையின் முதல் வரிக்கு மீண்டும் போய் பார்க்கவும்.

No comments:
Post a Comment